மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்குச் சிறப்பு இடஒதுக்கீடு; முதலமைச்சர் வரவேற்பு
அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் மாநிலங்கள் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் மாநிலங்கள் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு உயிர்காக்கும் அரசு மருத்துவர்களுக்கு மட்டுமின்றி - நோய் நொடியின்றிக் கிராமப்புற மக்களைப் பாதுகாத்திட வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.
Comments