ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

0 1608
ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் நடவடிக்கை செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என நீதிபதிகள்  ஆர்.எஃப். நாரிமன், நவீன் சின்ஹா மற்றும் இந்திரா பானர்ஜி அமர்வு மறுத்து விட்டது.

நான்கு வாரங்களுக்குப் பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அப்போது, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிப்பது குறித்து முடிவு செய்யலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments