முதுநிலை மருத்துவப் படிப்பில் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு
மருத்துவ முதுநிலைப் படிப்புகளில் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 50 விழுக்காடு இடங்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சில் வெளியிட்ட முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ஒழுங்குமுறைகளில் மாநில அரசுக்கு இட ஒதுக்கீடு வழங்க அதிகாரமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்துத் தமிழ்நாடு, உள்ளிட்ட மாநில அரசு மருத்துவர்கள் சங்கங்கள் வழக்குத் தொடுத்தன. இந்த வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவோ, மறுக்கவோ இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments