கொரோனாவால் கடந்த காலாண்டின் ஜிடிபி 19.2சதவிகிதம் சரிவை சந்திக்கும்-புள்ளி விவரங்கள்
கொரோனா காரணமாக கடந்த ஜூன் மாத த்துடன் முடிந்த காலாண்டில், இந்தியாவின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 19. 2 சதவிகிதம் குறைவாக இருக்கும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பரவல் துவங்குவதற்கு முன்னரே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிவை நோக்கி சென்றுவிட்டதாக புளும்பெர்க் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நகரங்களில் இருந்து சொந்த கிராமங்களுக்கு திரும்பியதால், இந்திய பொருளாதார வளர்ச்சி அப்படியே நிலைத்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments