வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

0 1549
தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து பாசனத்துக்குத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார்.

தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து பாசனத்துக்குத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார்.

ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையில் 59 அடிக்குத் தண்ணீர் உள்ளது. அணைக்கு நொடிக்கு ஆயிரத்து 357 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுப் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு, தேனி மதுரை மாவட்ட ஆட்சியர்கள் இன்று அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டு மலர் தூவி வரவேற்றனர்.

நொடிக்குத் தொள்ளாயிரம் கனஅடி வீதம் மொத்தம் 120 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும். இதன்மூலம் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments