நேற்று முதல் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் பின்னடைவு

0 1312
நேற்று முதல் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் பின்னடைவு

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக அவர் சிகிச்சை பெறும் டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

84 வயதான அவர், அந்த மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவருக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. இந்நிலையில் டெல்லி ராணுவ மருத்துவமனை இன்று வெளியிட்ட அறிவிப்பில், நேற்று முதல் பிரணாப்பின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments