ஆஸ்ட்ராய்ட் 2011 சிறுகோள் நாளை பூமியைக் கடந்து செல்லும் - நாசா விஞ்ஞானிகள் விளக்கம்
ஆஸ்ட்ராய்ட் 2011 என்றழைக்கப்படும் சிறு கோள் நாளை பூமியைக் கடந்து செல்லும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த முறை இந்த சிறுகோள் பூமியைக் கடந்து சென்ற போது நான்கு நாட்களுக்கு அதனைக் காண முடிந்தது. நிலவை விட பூமிக்கு அருகாமையில் கடந்து செல்வதால் அதனைக் காண முடிவதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த சிறுகோள் பூமியின் மீது மோதி ஆபத்து உண்டாகலாம் என்ற அச்சம் பரவியது.
ஆனால் அத்தகைய ஆபத்து ஏதுமில்லை என்றும் விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். 45 ஆயிரம் மைல்கள் தூரத்தில் மிகவும் பாதுகாப்பான முறையில் இந்த சிறுகோள் பூமியைக் கடந்து செல்லும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Comments