ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா-ரஷியா வெற்றி பெற்றதாக அறிவிப்பு

0 1908
இணைய தடையால் ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் சாம்பியன் பட்டம் இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இணைந்து வழங்கப்பட்டது.

இணைய தடையால் ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் சாம்பியன் பட்டம் இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இணைந்து வழங்கப்பட்டது.

இரு அணிகளும் மோதிய போட்டியின் முதல் சுற்று சமனில் முடிந்தது.

2வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த், விதித் குஜராதி மற்றும் ஹரிகா போட்டியை டிரா செய்ய, மற்ற வீரர்கள் தோல்வி அடைந்தனர். ஆனால், இணைய பிரச்னை காரணமாக காய்களை நகர்த்த முடியவில்லை என இந்தியா தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது.

புகாரை விசாரித்த நடுவர்கள் இந்தியா, ரஷியா இருநாடுகளும் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

ஒலிம்பியாட் சாம்பியன்ஸ் பட்டத்தை முதன்முறையாக கைப்பற்றிய இந்திய அணிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments