தடையை மீறி மொகரம் ஊர்வலம் நடத்த முயன்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

0 1419

ஸ்ரீநகரில் தடையை மீறி மொகரம் ஊர்வலம் நடத்த முயன்றவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள் மொகரம் துக்கநாளை அனுசரிக்க ஒன்று கூடியபோது, பாதுகாப்பு கருதி அதற்கு போலீசார் அனுமதியளிக்க மறுத்தனர். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளையும், துப்பாக்கிகளில் பெல்லட் குண்டுகளை வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த நிகழ்வில் ஊர்வலம் செல்ல முயன்ற ஏராளமானவர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. போலீசாரின் தாக்குதலுக்கு தேசிய மாநாட்டுக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments