இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான 2வது டி20 போட்டி இங்கிலாந்து அணி அபார வெற்றி

0 1917
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான 2வது டி20 போட்டி இங்கிலாந்து அணி அபார வெற்றி

பாகிஸ்தானிற்கு எதிரான 2வது டீ-ட்வெண்டி கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஓல்ட் ட்ராஃபர்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத் தொடங்கினர்.

பாபர் அசாம், முகமது ஹபீஸ் ஆகியோரின் அரைசதத்தால், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களை எடுத்தது.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள், பாகிஸ்தானின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.

டேவிட் மாலன் அரைசதம் கடக்க, கேப்டன் இயான் மார்கன் 33 பந்துகளில் 66 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

கடைசி ஓவரில் 5 பந்துகள் மிச்சமிருந்த நிலையில் 199 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments