ஐபிஎல் தொடரில் இருந்து ரெய்னா விலகியதற்கு.. CSK அணி நிர்வாகத்துடன் மனக்கசப்பு காரணமா?

0 7639

ஐ.பி.எல். போட்டிக்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற சுரேஷ் ரெய்னா, அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக, நாடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது உறவினர் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்ததால் அங்கிருந்து புறப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் ரெய்னா தங்குவதற்காக ஒதுக்கப்பட்ட அறையில் பால்கனி போன்ற வசதிகள் இல்லை எனவும், கொரோனா முன்னெச்சரிக்கையாக தோனிக்கு வழங்கப்பட்டதை போன்றே, சகல வசதிகளுடன் கூடிய அறையை தனக்கும் வழங்க வேண்டும் என ரெய்னா கேட்டதாகவும் கூறப்படுகிறது. அது சாத்தியப்படாததன் காரணமாகவே அவர் நாடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments