காதலியை மறக்க முடியாத விரக்தி.. பெற்றோர் மீது கொடூர தாக்குதல்..! இளைஞன் தற்கொலை

0 12409

தேனி மாவட்டம் கம்பத்தில் கைவிட்ட காதலியை மறக்க இயலாத விரக்தியில் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டரையும் அவரது மனைவியையும் வெட்டிவிட்டு, மென்பொறியாளரான மகன் பெல்ட்டால் கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...

தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற உதவி காவல் ஆய்வாளர் முருகேசன், இவரது மனைவி இந்திரா தேவி... இவர்களது ஒரே மகன் மனோஜ். பொறியியல் பட்டதாரியான இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில் காதலி வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த சில தினங்களாக சோகத்தில் இருந்த மனோஜ், சம்பவத்தன்று அதிகாலையில் வெளியே புறப்பட்டுள்ளான். இந்த அதிகாலை வேளையில் எங்கே செல்கிறாய் என்று கேட்டு பெற்றோர் புத்தி சொன்னதாக கூறப்படுகின்றது.

இதனால் ஆத்திரம் அடைந்த தாய் மற்றும் தந்தையை அரிவாளால் வெட்டி விட்டு தனது படுக்கை அறைக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டதாக கூறப்படுகின்றது.

இதில் காயம் அடைந்த முருகேசனும் அவரது மனைவியும் வீட்டின் கதவை பூட்டிவிட்டு சிகிச்சைக்கு சென்றனர்.

காயங்களுக்கு கட்டுப் போட்டுக் கொண்டு மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் மனோஜின் படுக்கை அறை கதவு நீண்ட நேரமாக உள்பக்கமாக பூட்டப்பட்டிருப்பதை கண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து திறந்தபோது, அங்கு, பெல்டால் கழுத்தை இறுக்கிச் சுற்றி, லாக் செய்த நிலையில், மனோஜ், தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அவரது, சடலத்தை மீட்டு, காவல்துறையினர் பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

கழட்டிவிட்ட காதலிக்காக பெற்றோரை வெட்டிவிட்டு, தனது உயிரை மாய்த்துக் கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments