இந்துக்களின் மனங்களைப் புண்படுத்தியதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரெஞ்சு மங்கை
ரிஷிகேஷில் நிர்வாண வீடியோ எடுத்த பிரெஞ்ச் பெண்ணை போலீசார் கைது செய்துளளனர்,ரிஷிகேஷில் பக்தர்கள் மனம் புண்படும் படி நடந்துக் கொண்டதற்காக பிரான்சை சேர்ந்த 27 வயது இளம் பெண் மேரி ஹெலனி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்.
அவர் கங்கை நதிக்கரையில் லட்சுமண் ஜூலா பாலம் மீது ஆடையின்றி ஸ்ட்ன்ட் காட்சிகளை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெண்களிடம் பாலியல் அத்துமீறல்கள் நடைபெறுவதால் விழிப்புணர்வுக்காகவும் பெண்கள் தற்காப்புக்காகவும் ஸ்டண்ட் காட்சிகளை படம் பிடித்ததாக பிரெஞ்ச் பெண் விளக்கம் அளித்துள்ளார்.
Comments