ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி மேல்முறையீடு மனு-உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

0 1495
ஸ்டெர்லைட் ஆலை திறப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள, மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள, மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு மூடப்பட்ட ஆலையை திறக்க அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, அந் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை கடந்த 18ம் தேதி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு,  காணொலி வாயிலாக இன்று விசாரிக்க உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments