இந்தியாவின் முதல் பெண் இருதய நிபுணர் பத்மாவதி காலமானார்
இந்தியாவின் முதல் பெண் இருதய நோய் நிபுணர் பத்மாவதி 103 வயதில், கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.
டெல்லியில் தங்கி வந்தவருக்கு கடந்த 11 நாட்களுக்கு முன்பாக நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது . இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு, இரு நுரையீரல்களும் கடுமையாக பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.
60 ஆண்டுகளுக்கும் மேலாக, மருத்துவ சேவையாற்றி வந்த அவர் இந்தியாவின் முதல் இருதயவியல் துறையை உருவாக்கினார். இதய நோய்கள் குறித்த விழிப்புணர்வினை மக்களிடையே கொண்டுவர பத்மாவதி பெரிதும் உதவியுள்ளார் .
Comments