குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில், புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி
குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் சிறந்த பொம்மைகள் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
மனத்தின் குரல் என்னும் பெயரில் பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் நேற்று பேசிய போது, குழந்தைகளைப் பற்றி எண்ணியபோது, அவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் சிறந்த பொம்மைகள் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் பொம்மைகள் உற்பத்தி மையங்களாகத் திகழ்வதாகத் தெரிவித்தார்.
உலக அளவில் பொம்மைகள் தயாரிப்புத் தொழில் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையது என்றும், அதில் இந்தியாவின் பங்கு மிகச் சிறியது என்றும் குறிப்பிட்டார்.
ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை உள்ளிட்ட நாட்டு நாய்கள் திறமையானவை என்று குறிப்பிட்ட மோடி, அவற்றின் பராமரிப்புக்கு அதிகச் செலவாவதில்லை என்றும் தெரிவித்தார்.
Comments