மக்கள் தொகை கணக்கெடுப்பு., என்பிஆர் பணிகள் தள்ளிவைப்பு?
முதலாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு அதை தொடர்ந்து தேசிய மக்கள் தொகை பதிவேட்டை புதுப்பித்தல் ஆகிய பணிகள் கொரோனாவால் மேலும் ஒரு ஆண்டு தள்ளிப் போகும் என தகவல் வெளியாகி உள்ளது.
130 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில், வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியில் 30 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
கடந்த ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை நடக்க வேண்டிய இந்த பணி கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தொற்று அபாயம் உள்ளதால், கணக்கெடுக்கும் பணியை மேலும் ஒரு ஆண்டுக்கு தள்ளிவைக்கலாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த இறுதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Comments