பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாசன வசதி மற்றும் குடிநீர்த் தேவைக்காகப் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தாமிரபரணி ஆற்றின் 11 கால்வாய்களில் வாழைப் பயிர்களைக் காக்கவும் குடிநீர்த் தேவைக்காகவும் செப்டம்பர் 1 முதல் 15 வரை 15 நாட்களுக்கு, விநாடிக்கு ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிரக் கார்ப் பருவ நெற்பயிர்களைக் காக்கத் தெற்கு வடக்கு கோடை மேலழகியான் கால்வாய்கள், நதியுண்ணிக் கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய் ஆகியவற்றில் செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 31 வரை நொடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Comments