மதுராவில் சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து

0 2597
மதுராவில் சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின.

காஜியாபாத்தில் இருந்து வல்லப்கார் பகுதிக்கு அந்த ரயில் சென்று கொண்டிருந்தது.  ஆக்ரா- டெல்லி  வழித்தடத்தில் விருந்தாவன் சாலை-ஆலை ரயில் நிலையத்துக்கு (Vrindavan Road & Azhai station) இடைப்பட்ட பகுதியில் வந்தபோது 5 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின. இதனால் டெல்லி-ஆக்ரா வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் யாரும் காயமடையவோ, உயிரிழக்கவோ இல்லை. சம்பவ இடத்துக்கு ரயில்வே ஊழியர்கள் வந்து தடம்புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments