ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர், முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் வாழ்த்து

0 1501
ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர், முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் வாழ்த்து

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலையாள மொழி பேசும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த மகிழ்ச்சியான ஓணம் திருநாளில் நமது அன்பு, இரக்கம், உழைப்பு அனைத்தையும் நாட்டின் வளர்ச்சிக்கும், வளமைக்கும் அர்ப்பணிக்க உறுதியேற்போம் என வாழ்த்தியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாபலி சக்ரவர்த்தியின் வரலாற்றை குறிப்பிட்டு, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில், மலையாள மக்களால் சாதி, மத பேதமின்றி கொண்டாடப்படும் இத்திருவோணத் திருநாளில், மக்கள் அனைவரும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட வேண்டும் என வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

அதே போல் ஆரோக்கியமான வாழ்வும், அனைத்து வளங்களும் பெற்று எந்நாளும் இன்புற்றிருக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், “ஓணம் திருநாள்” வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments