’நான் ஒரு தகுதியற்ற மனிதப் பிறவி” - சகோதரன், தாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற 14 வயது சிறுமி!

0 12575
லக்னோவில் துப்பாக்கிச்சூடு (representative image)

உத்திரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் 14 வயது சிறுமி தனது தாயையும், சகோதரனையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாயையும், சகோதரனையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சிறுமி ரயில்வே துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மகளாவார். அந்த சிறுமி தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டியில் கலந்துகொண்டிருக்கிறார். லாக் டவுன் காரணமாக கடுமையான மன உளைச்சலில் பாதிக்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

தீவிர மன அழுத்தத்திலிருந்த சிறுமி, தனது மணிக்கட்டை வெட்டிக்கொண்டு, ’தான் ஒரு தகுதியற்ற மனிதப்பிறவி’ எனப் பொருள்படும் வாசகத்தை ஜாம் மூலம் குளியலறை கண்ணாடியில் எழுதியுள்ளார். அதன் பிறகு, அந்த கண்ணாடியைத் துப்பாக்கியால் சுட்டும் உடைத்துள்ளார். அதன்பிறகு, குளித்துக்கொண்டிருந்த தனது தாய் மற்றும் சகோதரனின் தலையில் சுட்டுக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

போலிசார் நடத்திய விசாரணையில் சிறுமி தனது குற்றத்தை தன் பாட்டி முன்னிலையில் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், உடைந்து போயிருந்த கண்ணாடியில் எழுதப்பட்ட எழுத்துகளும் சிறுமியின் நோட்டு புத்தகத்தில் எழுதப்பட்ட எழுத்துகளும் ஒரே மாதிரி இருப்பதை போலிசார் உறுதி செய்துள்ளனர். அத்துடன் இல்லாமல் கொலை செய்யப்பட்டவர்கள் இறந்து கிடந்த இடத்தில் சிறுமியின் .22 காலிபெர் துப்பாக்கியையும் போலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

சிறுமி எதற்காகத் தனது சகோதரனையும், தாயையும் சுட்டுக்கொன்றார் எனும் தகவல் உறுதியாகத் தெரியவில்லை. ஆனாலும், அவர் தீவிர மன அழுத்தத்தால் இந்த கொலையைச் செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலை சம்பவம் இப்போது உத்திரப் பிரதேசத்தையே உலுக்கியெடுத்துள்ளது!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments