நடிகர் போஸ்மேன் உயிரிழப்பு குறித்த ட்விட்டர் பதிவு அதிக லைக்குகள் பெற்ற பதிவாக உருவெடுத்திருப்பதாக ட்விட்டர் தகவல்
ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்மேன் (Chadwick Boseman) உயிரிழப்பு குறித்த பதிவு மிக அதிக லைக்குகளை பெற்ற பதிவாக உருவெடுத்திருப்பதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது. பிளாக்பேந்தர் பட நாயகனான 43 வயதான போஸ்மேன், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்த பதிவு ட்விட்டரில் அவர் படத்துடன் கருப்பு நிற பின்னணியில் வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு உலகம் முழுவதும் இருந்து சுமார் 57 லட்சம் பேர் லைக்குகள் கொடுத்துள்ளனர்.
இதற்கு அடுத்து, நெல்சன் மண்டேலா தொடர்பாக ஓபாமா 2017ல் வெளியிட்ட பதிவு, 43 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. இதை சுட்டிக்காட்டி, ட்விட்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
— Chadwick Boseman (@chadwickboseman) August 29, 2020
"No one is born hating another person because of the color of his skin or his background or his religion..." pic.twitter.com/InZ58zkoAm
— Barack Obama (@BarackObama) August 13, 2017
Comments