மியான்மரில் இருந்து புதுடெல்லிக்கு ரூ.43 கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட் கடத்தல்

0 3825
மியான்மரில் இருந்து புதுடெல்லிக்கு ரூ.43 கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட் கடத்தல்

தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் இருந்து புதுடெல்லிக்கு கடத்தி வரப்பட்ட 43 கோடி ரூபாய் மதிப்பிலான 504 தங்க பிஸ்கட்டுகளை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு அதிகாரிகள், 8 பேர் கும்பலை கைது செய்துள்ளனர்.

Dibrugarh - New Delhi ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒரு கும்பல், தங்கம் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

ரெயில், புதுடெல்லி ரெயில் நிலையத்தை அடைந்ததும் சந்தேகத்திற்கிடமான 8 பேரை பிடித்து, அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, தங்க கடத்தலுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உடைகளை தயாரித்து, அதற்குள் மறைத்து வைத்து, இவர்கள் தங்க பிஸ்கட்டுகளை கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

வருவாய் புலனாய்வு அதிகாரிகளின் நடவடிக்கையால் சர்வதேச தங்க கடத்தல் சம்பவம் அம்பலமாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments