3 நிமிடத்தில் வெள்ளத்தால் உருக்குலைந்தது சீனாவின் கட்டமைப்பு..! புரட்டி எடுக்கும் மழை வெள்ளம்

0 62426
இந்தியாவுக்கு தீராத தலைவலியாக இருந்து வரும் சீனா மற்றும் பாகிஸ்தானை கனமழை புரட்டி எடுத்து வருகின்றது.

சீனா மற்றும் பாகிஸ்தானில் தொடரும் கனமழையால் ஏற்பட்ட பெரு வெள்ளம் உள்கட்டமைப்புகளை சிதறடித்து வருகின்றது. வல்லரசுகளை எல்லாம் டல்லரசுகளாக்கும் இயற்கையின் கோரத்தாண்டவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

இந்தியாவுக்கு தீராத தலைவலியாக இருந்து வரும் சீனா மற்றும் பாகிஸ்தானை கனமழை புரட்டி எடுத்து வருகின்றது.

தொழில் நுட்பத்தில் வல்லரசாக காட்டிக் கொண்டு உலகெங்கும் கொரோனாவை பரப்பிவிட்டு, லடாக் எல்லையில் பிரச்சனைகளை தூண்டிவிட்டு இந்தியாவை வம்புக்கு இழுத்த சீனாவின் ஒரு பகுதியின் கட்டமைப்புகளை மழை வெள்ளம் சிதறடித்து வருகின்றது

கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கன மழையால் யாங்ட்சி நதிக்கரையோர நகரங்களில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றன.

நீர் மேலாண்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக நம்ம ஊர் அரசியல் வாதிகளால் சுட்டிக்காட்டப்பட்ட சீனாவின் 3 முக்கிய அணைகள் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டதால் முக்கிய சாலைப்பகுதி ஒன்று மூன்றே நிமிடங்களில் பெரும் வெள்ளக்காடாகி இயற்கைக்கு முன்பு வல்லரசுகள் எல்லாம் வெறும் டல்லரசுகள் தான் என்பதை உணர்த்துவதாக உள்ளது.

கார்கள், கனரக வாகனங்கள் எல்லாம் காற்றடைத்த பனூன்கள் போல வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன

யாங்ட்சி நதியின் குருக்கே கட்டப்பட்டிருந்த பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. 1970 ஆம் ஆண்டுக்கு பின்னர் மழை வெள்ளத்தால் சீனாவில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது

உலக நாடுகளுக்கு கொரோனாவை கொடுத்து பொருளாதாரத்தை முற்றிலும் முடக்கி விட்டு தங்களை மட்டும் காத்துக் கொண்ட சீனாவுக்கு இயற்கை பேரிடியை கொடுத்து வருகின்றது

அதே போல பாகிஸ்தானின் கராய்ச்சி நகரம் கனமழை வெள்ளத்தால் மெல்ல கரைந்து கொண்டிருக்கின்றது.

அவசர உதவிக்கு ஆயுதத்துடன் வந்த பாகிஸ்தான் போலீஸ் வாகனம் ஒன்று வெள்ளத்தில் சிக்கி அடித்துச்செல்லப்பட்டது. காவலர்கள் அதில் இருந்து குதித்து தப்பும் நிலைக்கு தள்ளப்பட்டனர்

சீனாவின் கட்டமைப்புகள் சிதறியுள்ள நிலையில் கட்டமைப்பே இல்லாத பாகிஸ்தான் இந்த வெள்ளதால் பதறிக்கிடக்கின்றது.

கார்களும் , பேருந்துகளும் வெள்ளத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலாமல் சாலையில் தவித்து நிற்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

பாகிஸ்தான் அரசால் மீட்பு பணிகளில் தீவிரம் காட்ட இயலாததால், ஏராளமான பொதுமக்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்து தவித்து வருகின்றனர்

இந்தியாவிற்குள் வீண் குழப்பங்களை ஏற்படுத்தி மற்ற நாடுகளிடம் தங்களை சமதானப்புறாக்களாக காட்டிக் கொள்ள துடிக்கும் நயவஞ்சக நாடுகளுக்கு இயற்கை தக்க பாடத்தை கற்றுத் தந்துள்ளதற்கு இந்த பெரும்மழை வெள்ளக்காட்சிகளே சாட்சி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments