அன்லாக் 4 - மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றுமா தமிழகம் ?

0 5979
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊரடங்குத் தளர்வுகளை தமிழக அரசு முழுமையாகப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றிரவு அன்லாக் 4க்கான வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு வெளியிட்டது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊரடங்குத் தளர்வுகளை தமிழக அரசு முழுமையாகப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றிரவு அன்லாக் 4க்கான வழிகாட்டு நெறிகளை மத்திய அரசு வெளியிட்டது.

இபாஸ் முறை கூடாது என்றும் மாநில அரசுகள் தன்னிச்சையாக ஊரடங்கை அறிவிக்கக்கூடாது என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்டங்களுக்கு இடையே தமிழக அரசு பொதுப் போக்குவரத்தைத் தொடங்க பரிசீலிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜிஎஸ்டி வரி இழப்பை ஈடுசெய்யவும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் நிதி நெருக்கடியில் உள்ள தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றும் என்று கூறப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேலும் பல ஊரடங்குத் தளர்வுகளை இன்று அறிவிக்க வாய்ப்புள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments