நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுகாதாரத்துறை செயலர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு

0 1647
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுகாதாரத்துறை செயலர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவு

அரசு மருத்துவர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு வரும் 4ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களை தொலைதூர மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்தும், சாதாரண பதவியில் அமர்த்தியும் பழிவாங்கக்கூடாது என்ற உத்தரவிற்கு மாறாக, மூத்த மயக்கவியல் நிபுணரான தன்னை ஜூனியர்களுடன் சேர்ந்து பணிபுரியும் வகையில் அவசர சிகிச்சை பிரிவில் அரசு நியமித்துள்ளதாக கூறி, மருத்துவர் சையது தாஹிர் ஹூசைன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,  அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யாமல் தொடர்ந்து காலதாமதம் செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments