தாமதமான கடன் தவணை அதிகரித்த வட்டி - தீக்குளித்த வாடிக்கையாளர்

0 7595
தாமதமான கடன் தவணை அதிகரித்த வட்டி - தீக்குளித்த வாடிக்கையாளர்

தஞ்சாவூரை அடுத்த வல்லத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். வெளிநாட்டில் வெல்டர் வேலை செய்து ஊர் திரும்பியவர் சொந்த வீடு கட்ட எண்ணி சிட்டி யூனியன் வங்கியில் 9 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

மாதா மாதம் வங்கி நிர்ணயித்த தேதிகளில் தவணைத் தொகையை கட்ட முடியாமல் கையில் கிடைக்கும் நேரத்தில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வங்கியில் கட்டி வந்துள்ளார் ஆனந்த்.

தவறிய தவணைகள் ஒவ்வொன்றுக்கும் வட்டி ஏறி, அவர் கட்டிய 13 லட்ச ரூபாயில் 3 லட்ச ரூபாய் மட்டுமே அசல் கணக்கிலும் மீதமுள்ள 10 லட்ச ரூபாய் வட்டிக் கணக்கிலுமே சேர்ந்திருக்கிறது.

எனவே கடனாக வாங்கிய 9 லட்ச ரூபாயில் 3 லட்ச ரூபாய் போக மீதமுள்ள 6 லட்ச ரூபாயை கட்டுமாறும் இல்லையென்றால் வீடு ஏலத்துக்கு விடப்படும் என்றும் வங்கித் தரப்பில் கூறியுள்ளனர்.

ஊரடங்கு காரணமாக வருவாய் இல்லாததால் அவகாசம் கொடுக்குமாறு கேட்ட ஆனந்திடம், அவகாசம் கொடுத்தால் மேலும் வட்டி அதிகரிக்கும் என வங்கி நிர்வாகம் கூறியதாகத் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து வங்கிக்கு வெளியே வந்த ஆனந்த், யாரும் எதிர்பாராத வகையில் தனது இரு சக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலைப் பிடித்து உடம்பில் ஊற்றி பற்றவைத்துக் கொண்டுள்ளார்.

உடல் முழுவதும் தீக்காயங்களுடன் பேசிய ஆனந்த், தனது வீட்டை ஏலத்துக்கு விட்டு விடாமல் எப்படியாது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் ஒப்படைக்குமாறு கூறினார்.

90 விழுக்காடு காயமடைந்த ஆனந்த், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வங்கித் தரப்பில் கேட்டபோது, விதிகளுக்கு உட்பட்டே தாங்கள் நடந்துகொண்டதாகவும் கூடுதலாக ஆன்ந்திடம் அபராதமோ, வட்டியோ கேட்கவில்லை என்றும் கூறினர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


  • Saravanan

    where is bank name?why you are saving Bank??????