மத்திய தரைக்கடலில் சிக்கிய புலம்பெயர்ந்தோரை மீட்கும் பணியில் பாங்க்ஸி நிதியளித்த படகு
பிரிட்டிஷ் கலைஞரான பாங்க்ஸி நிதியளித்த படகு, மத்திய தரைக்கடலில் சிக்கிய புலம்பெயர்ந்தோரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் கடல் வழியே இத்தாலிக்கு புலம்பெயர முயன்ற 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், பாங்க்ஸி படைப்புகளால் அலங்கரிக்கப்பட்ட லூயிஸ் மைக்கேல் என்று அழைக்கப்படும் படகு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில் இது வரை 89 பேர் மீட்கப்பட்டுள்ளதாக படகை இயக்கும் ஜெர்மானிய தொண்டு நிறுவனம் சீவாட்சின் தெரிவித்துள்ளது.
கடத்தல் முயற்சிகளை முறியடிப்பதற்கும், புலம்பெயர்வோரின் படகுகளை மறிக்க லிபியா கடலோர காவல்படையினருக்கும் உதவும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
Comments