உலகின் மிகச்சிறிய பறக்கும் கார்
ஜப்பானில் வடிவமைக்கப்பட்ட உலகின் மிகச்சிறிய பறக்கும் காரில் அமர்ந்து விமானி சோதனை மேற்கொண்டதன் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
டோக்கியோவை தளமாகக் கொண்ட ஸ்கைட்ரைவ் நிறுவனம் தனது எஸ்டி-03 மாடல் பறக்கும் காரின் சோதனை இம்மாத தொடக்கத்தில் நடைபெற்றது என்றும், மத்திய ஜப்பானில் உள்ள ஒரு சோதனை தளத்தில் சுமார் நான்கு நிமிடங்களுக்கு கார் வானில் பறந்தது என்றும் குறிப்பிட்டுள்ளது.
4 மீட்டர் நீளம் மற்றும் அகலத்துடன் 2 மீட்டர் உயரம் கொண்ட பறக்கும் கார், வழக்கமான 2 கார்களுக்கான பார்க்கிங் இடத்தில் நிறுத்துவதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் ஸ்கைட்ரைவ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments