தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட 5 பேருக்கு கேல்ரத்னா விருது

0 2423
தமிழகத்தை சேர்ந்த பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட 5 பேருக்கு ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

தமிழகத்தை சேர்ந்த பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட 5 பேருக்கு ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

கொரோனா பரவல் காரணமாக இந்த விருதுகளை காணொலி மூலம் டெல்லியில் இருந்தபடி அவர் வழங்கினார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் சர்மா துபாய் சென்றிருப்பதாலும், மல்யுத்த வீரர் வினேஸ் பொகாத் (Wrestler Vinesh Phogat) கொரோனா பாதித்து தனிமையில் இருப்பதாலும் கலந்து கொள்ளவில்லை.

அதேநேரத்தில் பெங்களுருவில் உள்ள தேசிய விளையாட்டு ஆணைய மையத்தில் இருந்தபடி மாரியப்பன், மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பாலும், புனேயில் இருந்தபடி டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ராவும் (Manika Batra) பெற்றனர்.

இதேபோல் அர்ஜூனா, துரோணாசாரியா விருது உள்ளிட்ட 69 விருதுகளையும் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments