வீழ்ச்சியில் இருந்து வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்கும் இந்தியப் பொருளாதாரம்
இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுப் பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுத்துள்ளன.
ஏப்ரல் மே மாதங்களில் பயணிகளுக்கான 33 ஆயிரத்து 546 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன.
ஜூன் மாதத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 188 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
இதுபோல் பல்வேறு துறைகளில் வளர்ச்சிப் போக்கால் இரண்டாவது காலாண்டில் பொருள் கொள்முதல் குறியீடு, தொழில் உற்பத்திக் குறியீடு ஆகியன உயர்ந்துள்ளன.
Comments