டெல்லிக்கே ராஜாவாக இருந்தாலும் பாஜக தமிழகத்தில் இன்னும் வளராத கட்சி - அமைச்சர் செல்லூர் ராஜு
பாஜக டெல்லிக்கே ராஜாவாக இருக்கலாம், ஆனாலும் தமிழகத்தில் இன்னும் வளராத கட்சி என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.
மதுரை காமராஜர் சாலையில் தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க துவக்க விழாவில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவின் ஹெச்.ராஜா ஏதாவது பேசிகொண்டே இருப்பார் என்றும், பாஜக திராவிட இயக்கங்கள் மீதுதான் தமிழகத்தில் சவாரி செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும் விஜய் ரசிகர்கள் சின்னபிள்ளைகள் என்றும், விஜய், தமிழர் நல்ல நடிகர் அவ்வளவுதான் என்றார்.
Comments