ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தேவைதானா என பரிசீலிக்க வேண்டும் - மக்கள் நீதி மய்யம் கட்சி
கொரோனா குறித்து மக்கள் விழிப்புணர்வு பெற்று விட்டதால் ஆகஸ்ட் 31க்கு பிறகு ஊரடங்கு தேவைதானா என அரசு பரிசீலிக்க வேண்டுமென கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், இனியும் மக்களை ஊரடங்கு என்ற பெயரில் முடக்கி வைத்தால் பொருளாதார சீர்கேடு என்ற அசாதாரண நிலையோடு, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் அபாய கட்டத்துக்கு செல்ல வழிவகுக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஆதலால் மக்கள் வேலைக்கு செல்லும் வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும், அரசு போக்குவரத்தை ஓரளவாவது இயங்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் அதில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
Comments