சுஷாந்த் மரண விவகாரம்... தெளிவாக பதிலளிக்காத ரியா

0 3348
நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பாக அவரது காதலி ரியா சக்ரபர்த்தியிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் தெளிவாக பதில் அளிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பாக அவரது காதலி ரியா சக்ரபர்த்தியிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் தெளிவாக பதில் அளிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.  

வெள்ளியன்று சுஷாந்தின் காதலியும் நடிகையுமான ரியா சக்ரபர்த்தியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சுமார் 10 மணி நேரம் நீடித்த விசாரணையில் சுஷாந்த் மற்றும் அவரது குடும்பத்தினருடன், ரியாவுக்கு இருந்த உறவு, சுஷாந்தை பிரிந்து சென்றதற்கான காரணம், பிரிந்து சென்ற பின்னர் சுஷாந்துடன் பேசினாரா என்பன உட்பட 10 முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட ஜூன் 14ம் தேதியன்று அவரது தொலைபேசி அழைப்பை ரியா ஏற்காதது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால் இந்த கேள்விகள் எதற்குமே தெளிவாக பதிலளிக்காத ரியா தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும், தான் பிரிந்து வந்த பின்னர் சுஷாந்துக்கு என்ன நேர்ந்தது என்பவை குறித்து தனக்கு தெரியாது என்றும் மட்டுமே பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் நடிகை ரியாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

இதனிடையே சுஷாந்தின் நண்பர் சித்தார்த் பிதானி, உதவியாளர்கள் நீரஜ், தீபேஷ், சமையலர் கேசவ், ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், சுஷாந்தின் இறுதி நிமிடங்கள் குறித்து தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் தனது மூடிய அறைக்குள்ளே சுஷாந்த் நேரம் செலவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments