பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் - கமலா ஹாரிஸ்
பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் மற்றும் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் சேருவதற்கான உறுதி மொழியை கமலா ஹாரிஸ் அளித்தார்.
அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக்கட்சியின் சார்பில் போட்டியிடும் இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ், ஆன்லைன் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, ஐரோப்பிய, ஆசிய நட்பு நாடுகளின் நம்பிக்கை மற்றும் ஆதரவு எவ்வாறு மீட்டெடுக்கப்படும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கமலா ஹாரிஸ், காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என்றும் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை வலுப்படுத்தி மீண்டும் நுழையும் என்றும் வாக்குறுதியளித்தார்.
Comments