பிரபல ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்மேன் காலமானார்
பிரபல ஹாலிவுட் நடிகர் சாட்விக் போஸ்மேன் (Chadwick Boseman) புற்றுநோய்க்கு சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். 43 வயதான அவர், பிளாக் பேந்தர், 21 பிரிட்ஜஸ், அவஞ்சர்ஸ் இன்பினிடி வார், அவஞ்சர்ஸ் என்ட் கேம், கேப்டன் அமெரிக்கா சிவில் வார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக, பிளாக் பேந்தர், அவஞ்சர்ஸ் பட வரிசைகளில் அவர் ஏற்று நடித்த கதா பாத்திரங்கள் அவருக்கு என தனி ரசிகர்களை உலகம் முழுவதும் பெற்று தந்திருந்தது. கடந்த 4 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த அவர் நேற்று உயிரிழந்தார்.
Comments