ஊடகங்கள் தவறாக சித்தரிப்பதாகவும் பின்தொடர்வதாகவும் நடிகை ரியா சக்ரபோர்த்தி குற்றச்சாட்டு

0 2436
நடிகை ரியா சக்ரபோர்த்தி அளித்த புகாரின் பேரில், மும்பை போலீசார் அவருக்கு பாதுகாப்பு அளித்துள்ளனர். நடிகர் சுஷாந்த்சிங் மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் ரியாவிடம் 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

சுஷாந்த்தை தாம் கடைசியாக சந்தித்த நாளான ஜூன் 8ம் தேதி நடந்தது என்ன என்பது குறித்து அவர்களிடம் விளக்கினார். அதனைத் தொடர்ந்து, சகோதரர் சோவிக்குடன் சாந்தா குரூஸ் காவல் நிலையத்துக்கு வந்த ரியா, தம்மைப் பற்றி தவறாக சித்தரிக்கும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தார்.

செய்தியாளர்கள் தன்னை எங்கு சென்றாலும் துரத்துவதாக புகார் தெரிவித்ததை அடுத்து, போலீசார் பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments