கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்தை நெருங்கியது
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட கூடுதலாக 18 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியதாகவும் இறப்பு விகிதம் 1 புள்ளி 82 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமானவர்கள் 26 லட்சத்தை நெருங்கி 76 புள்ளி 28 சதவீதமாக உள்ளது.
இதனிடையே நாடு முழுவதும் 16 லட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 2 லட்சத்து 17 ஆயிரம் ஆக்ஸிஜன் வசதியுடனான படுக்கைகள் மற்றும் 57 ஆயிரத்து 380 ஐ.சி.யூ படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
?#CoronaVirusUpdates:
— #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) August 29, 2020
?#COVID19 India Tracker
(As on 29 August, 2020, 08:00 AM)
➡️Confirmed cases: 34,63,972
➡️Recovered: 2,648,998 (76.5%)?
➡️Active cases: 7,52,424 (21.7%)
➡️Deaths: 62,550 (1.8%)#IndiaFightsCorona#IndiaWillWin#StaySafe
Via @MoHFW_INDIA pic.twitter.com/8oo3APfPac
Comments