ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் விநியோகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் இன்றுமுதல் வழங்கப்படுகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் இலவச டோக்கன்கள் வழங்குவது கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டது .
தற்போது 300 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் தினசரி 9ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகன்றனர். இந்நிலையில் பக்தர்கள் வேண்டுகோளை கருத்தில் கொண்டு இன்று முதல் திருப்பதியில் 3ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பக்தர்கள் ஆதார் கார்டை காண்பித்து டோக்கன்களை திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசம் மற்றும் விஷ்ணு நிவாசம் ஆகிய இடங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோவிலில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கான டோக்கன்கள் விநியோகம் | #Tirupati | #FreeToken https://t.co/45T5BkgVsW
— Polimer News (@polimernews) August 29, 2020
Comments