வசந்தகுமாருக்கு சொந்த ஊரில் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு
நிமோனியா காய்ச்சலால் சென்னையில் நேற்று காலமான, எம்.பி. வசந்தகுமாரின் இறுதிச் சடங்குகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் நடைபெற உள்ளது.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பியும், வசந்த் அன்கோ உரிமையாளருமான வசந்தகுமார் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதில் இருந்து மீண்டுவிட்டதாக பரிசோதனையில் தெரிய வந்த நிலையில், நிமோனியா காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு நேற்று மாலை காலமானார்.
வசந்தகுமாரின் மறைவுச் செய்தி அறிந்ததும் தியாகராய நகரிலுள்ள அவரது வீட்டு முன்பு, காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.
இன்று காலை வசந்தகுமாரின் உடலை மருத்துவமனையில் இருந்து குடும்பத்தினர் பெற்றுக் கொண்ட பின், தியாகராயநகரிலுள்ள வசந்தகுமாரின் இல்லம் முன்பு அவரது உடல் வைக்கப்படுகிறது.
பின்னர் சத்தியமூர்த்தி பவன் முகப்பில் பொதுமக்களின் பார்வைக்காக ஒரு மணி நேரம் வைக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
வசந்தகுமாருக்கு சொந்த ஊரில் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு | #Vasanthakumar | #VasanthandCo https://t.co/iuhyC659jh
— Polimer News (@polimernews) August 29, 2020
Comments