பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ஒருவன் கைது

0 1593
ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கிலூரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் 5 பேர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால், பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.

இந்த மோதலில் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட மற்றொரு பயங்கரவாதியிடம் விசாரணை நடத்தி வருவதாக ஐஜி விஜயகுமார் தெரிவித்தார்.

கொல்லப்பட்ட 4 பயங்கரவாதிகளில் காவல்துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய பின்னர் பயங்கரவாதியாக மாறிய ஷகுர் அகமது என்பவனும் அடங்குவான் என்று அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments