எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சுயநினைவுடன் இருக்கிறார்: எம்ஜிஎம் மருத்துவமனை

0 10237

பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் சுய நினைவுடன் உள்ளதாக சென்னை - MGM மருத் துவமனை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்பிரமணி யம், கடந்த 21 நாட்களாக அமைந்தகரையில் உள்ள MGM மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கிறார். உடல் நிலை குறித்து, MGM மருத்துவமனையின் உதவி இயக்குநரான மருத்துவர் அனுராதா பாஸ்கரன், மாலையில் வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் நிலை , தற்போதைய நிலையில் சீராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிசியோ தெரபி சிகிச்சையை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் நிலை உள்ளதாக குறிப்பிட்டு உள்ள மருத் துவமனை நிர்வாகம், தீவிர சிகிச்சை பிரிவில் எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் உதவி யுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments