சேலம் மாவட்டத்தின் கழிவுகளாலும் ஆக்கிரமிப்புகளாலும் நாசமடைந்து வரும் வசிஷ்ட நதி
சேலம் மாவட்டத்தின் முக்கிய ஆறுகளில் ஒன்றான வசிஷ்ட நதி கழிவு நீர் ஓடை போல் மாறி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆத்தூரை அடுத்த பெத்தநாயக்கன்பாளையம் அருகே கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதியின் மூலம் பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், தலைவாசல் வட்டார பகுதிகளும், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களும் பாசன வசதி பெறுகின்றன.
மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வரும் இந்த நதி கழிவுநீர் கலப்பாலும் ஆக்கிரமிப்புகளாலும் நாசமடைந்து வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு வெளியிட்ட மிக மோசமாக மாசடைந்த நதிகளின் பட்டியலில் வசிஷ்ட நதி முதலிடம் பிடித்து அதிர்ச்சியை கொடுத்தது.
வசிஷ்ட நதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் கலப்பைத் தடுத்து, அதனை மீட்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
Comments