சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உட்பட 13 பேருக்குக் கொரோனா!

0 24778
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கும் அணியின் ஊழியர்கள் 12 பேருக்கும் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது வீரர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகள் இந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்டது. நடக்குமா, நடக்காதா என்ற இழுபறிக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. செப்டம்பர் மாதம் 19 - ம் தேதி முதல் ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ள நிலையில் ஒவ்வொரு அணியாகத் துபாய்க்குச் சென்றுள்ளன. அங்கு கொரோனா நோய்த் தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டு அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தான் துபாய் சென்றடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கும் பணியாளர்கள் 12 பேருக்கும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மேலும் ஒரு வாரத்துக்குத் தனிமையில் இருக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments