பிரதமர் ஜன் தன் திட்டத்தில் 40 கோடிக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு வங்கிக் கணக்கு - மத்திய நிதியமைச்சகம்

0 2124

பிரதமர் ஜன் தன் திட்டத்தில் நாற்பது கோடிக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏழை மக்களுக்கு அரசின் மானியம் நேரடியாகக் கிடைக்கும் வகையில் அவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கும் ஜன் தன் திட்டம் 2014ஆம் ஆண்டு ஆகஸ்டில் தொடங்கப்பட்டது.

கடந்த ஆறாண்டுகளில் 40 கோடியே 35 லட்சம் ஜன் தன் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் கணக்குகளில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வைப்புத் தொகை உள்ளதாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments