Bad Boy Billionaires தொடரை தமக்கு முன்னதாகவே போட்டுக்காட்ட வேண்டும் என்ற மெகுல் சோக்சியின் மனு தள்ளுபடி

0 1363

நெட்பிளிக்ஸ்-ன் தொடரான Bad Boy Billionaires-ஐ தமக்கு முன்னதாகவே போட்டுக்காட்ட வேண்டும் என மோசடி வைர வியாபாரி மெகுல் சோக்சியின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

விஜய் மல்லையா, சுபரதா ராய், ஹர்ஷத் மேத்தா, நீரவ் மோடி உள்ளிட்ட மோசடி தொழிலதிபர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் இந்த வெப் தொடரில், தமது நெருங்கிய உறவினரான நீரவ் மோடியும் இடம் பெற்றுள்ளதால், தொலைக்காட்சித் தொடரை தமக்கு போட்டு காண்பிக்குமாறு மெகுல் சோக்சி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

வேண்டுமானால் நீதிமன்றத்தில் தொலைக்காட்சி தொடரை போட்டு காட்டலாம், மெகுல் சோக்சிக்கு காட்ட முடியாது என நெட்பிளிக்ஸ் திட்டவட்டமாக கூறிவிட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments