வடகொரியாவில் பவி புயல் பாதிப்புகளை அதிபர் கிம் ஜாங் உன் நேரில் ஆய்வு - அந்நாட்டு செய்தி நிறுவனம்
வடகொரியாவில் பவி புயலால் எதிர்பார்த்ததைவிட குறைந்த அளவு பாதிப்புகளே ஏற்பட்டுள்ளது என்று அதிபர் கிம் ஜாங் உன் கூறியதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தலைநகர் பியோங்யாங்க் அருகே பவி புயல் கரையை கடந்த நிலையில், கனமழை மற்றும் சூறாவளிக்காற்றால் பல இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்தன.
இந்த நிலையில், தென் ஹுவாங்கே மாகாணத்தில் அதிபர் கிம் ஜாங் உன், புயல் சேதம் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டதாகவும், உயிரிழப்பு மற்றும் பயிர் சேதம் ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை அவர் பாராட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments