கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரிப் போராட்டம் - காவல்துறையினர் தடியடி

0 1627
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரிப் போராட்டம் - காவல்துறையினர் தடியடி

கேரளத்தின் வயநாட்டில் முதலமைச்சர் பதவியில் இருந்து பினராயி விஜயன் விலகக் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் இளைஞரணியினரைக் காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டினர்.

வெளிநாட்டில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்திய வழக்கு தொடர்பாகக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வயநாட்டில் காங்கிரஸ் இளைஞரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், காவலர்கள் திடீரெனத் தடியடி நடத்தி விரட்டினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments