தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல்.. இரட்டை சகோதரர்களின் முயற்சி..!

0 5263
ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் விபத்தில் சிக்கிய தங்களது தந்தையை பறிகொடுத்தது போன்று வேறு யாருக்கும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள மதுரையை சேர்ந்த இரட்டை சகோதரர்களுக்கு பாராட்டு குவிகிறது.

ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் விபத்தில் சிக்கிய தங்களது தந்தையை பறிகொடுத்தது போன்று வேறு யாருக்கும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள மதுரையை சேர்ந்த இரட்டை சகோதரர்களுக்கு பாராட்டு குவிகிறது.

மேலூரை சேர்ந்த கண்ணன் - கலைவாணி தம்பதியரின் மகன்கள் பாலச்சந்தர், பாலகுமார். இரட்டை சகோதரர்களான இவர்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.

சிறு வயது முதலே அறிவியல் கண்டுபிடிப்புகளில் அதீத ஆர்வம் கொண்ட இந்த மாணவர்கள், கையில் கிடைத்தவற்றை வைத்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய தந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் தந்தையை பறிகொடுத்த இந்த மாணவர்கள், அதுபோன்று வேறுயாருக்கும் நடக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி, அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.

அதன்படி ஆம்புலன்ஸ் வாகனம் புறப்பட்டதும் 2 கி.மீ., தூரத்திற்கு முன்பே அதில் உள்ள ஜி.பி.எஸ்.கருவி மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு குறுஞ்செய்தி வந்து விடும்.தொடர்ந்து சர்க்யூட் போர்டு தானாக இயங்க ஆரம்பித்து சாலைகளில் உள்ள மின் விளக்கில் கட்டப்பட்டுள்ள ஒலி பெருக்கியின் மூலம் 'ஆம்புலன்ஸ் வருகிறது. வழிவிடுங்கள்' என்று அறிவிப்பதோடு, ஊதா நிறத்தில் விளக்கு ஒளிரும்.

ஆம்புலன்ஸ் வாகனம் குறிப்பிட்ட ஒலிபெருக்கி சென்சாரை கடந்ததும் மீண்டும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பப்பட்டு அந்த ஒலிபெருக்கியின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அடுத்த ஒலிபெருக்கி இயக்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் போக்குவரத்து மற்றும் மக்கள் கூட்டம் மிகுந்த பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் எளிதில் கடந்து செல்ல முடியும். பொதுவாக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் குறைந்தது 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுவதால், அதில் உள்ள சைரன் சத்தம் குறிப்பிட்ட தொலைவில் மட்டுமே கேட்கும்.

ஆனால், மாணவர்கள் கண்டுபிடித்துள்ள இந்த தொழில்நுட்பம் மூலம் நாம் இருக்கும் இடத்தில் இருந்து ஒன்றிரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தாலும் முன்னதாகவே தெரிந்துவிடும்.

சென்னை போன்ற போக்குவரத்து மிகுந்த நகரங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தடையின்றி விரைந்து செல்வது கேள்விக்குறியாகவே இருந்து வரும் சூழலில், மாணவர்களின் இந்த புதிய கண்டுபிடிப்பு நிச்சயம் மாற்று முயற்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments