ஜோ பிடெனுக்கு ஆதரவாக தொலைக்காட்சிகளில் விளம்பரம்..! சூடு பிடிக்கும் தேர்தல் பிரசாரம்

0 1144

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடெனுக்கு ஆதரவாக புதிதாக உருவாக்கப்பட்ட 2 நிமிட விளம்பரம் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

வயதானவராக ஜோ பிடென் உள்ளார் என குடியரசு கட்சினரால் விமர்சிக்கப்படும் நிலையில், அதற்கு மாறாக இந்த விளம்பரத்தில் ஜோ பிடென் சைக்கிள் ஓட்டுவது, ஏர் போர்ஸ் விமானத்தில் செல்வது போல சுறுசுறுப்பாக இருக்கும் காட்சிகள் உள்ளன.

1972 ஆம் ஆண்டில் மனைவி நெய்லியா (Neilia), ஒருவயது மகள் நவோமியை (Naomi) விபத்தில் இழந்தது, 2015இல் மகனை புற்றுநோய்க்கு பறிகொடுத்தது சுட்டிக்காட்டப்பட்டு, அதிலிருந்து பிடென் மீண்டு வந்தது பதிவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments